ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற காவலரின் மனைவி..!
வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கணவர் மீது குற்றம் சாட்டி காவலரின் மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்மேட்டை சேர்ந்த வித்யாவுக்கும், அருணுக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. தற்போது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி என்பது வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்துவதாக வித்யா குற்றம்சாட்டினார். கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.







