கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய மர்ம நபர்கள்..!
திருப்பத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் 56 வயதான பிச்சைமுத்து என்பவர் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய பொழுது இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த பிச்சைமுத்துவை வழிமறித்த இருவர் அவரை கட்டையால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். மீட்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலரான பிச்சையமுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிச்சை முத்துவை தாக்கிய நபர்களை தேடி வருகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பிச்சையைமுத்துவை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் தர்மராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.






