மனைவியுடன் மட்டும் தாம்பத்தியும் கொள்ள முடியவில்லை..விவாகரத்து கோரி மனு..!
மனைவியுடன் மட்டும் தாம்பத்தியும் கொள்ள முடியாத கணவரிடம் இருந்து இளம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் பம்பாய் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில் கணவர் தன்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என்றும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தங்களால் ஒன்றிணைய முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். திருமணம் முடிந்து 17 நாட்கள் மட்டுமே கணவருடன் வாழ்ந்ததாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார்.
இதையடுத்து அவரின் 27 வயது கணவர் தாக்கல் செய்த மனுவில் தன்னால் மனைவியுடன் மட்டும் தான் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றும் தனக்கு ஆண்மை குறைவு இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் தன் மனைவியை தவிர வேறு பெண்களிடம் உறவு கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும் குறிப்பிட்ட ஒருவருடன் மட்டும் உறவு வைத்துக் கொள்ள முடியாதது பொதுவான ஆண்மை குறைவிலிருந்து வேறுபட்டது என்றும்,மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் இணைய முடியாத இளம் தலைமுறையினருக்கு மனரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். எனவும் தீர்ப்பு குறிப்பிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





