--- --:--:-- --

கபினி அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு..!

10

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு கணிசமாக உயா்த்தப்பட்டுள்ளது.

 

 

அணைக்குத் தற்போது வினாடிக்கு 31,700 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்புக் கருதி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 27,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் இன்று மாலைக்குள் தமிழ்நாட்டின் எல்லையான ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon