போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர் ..!
கும்பகோணத்தில் மளிகைக் கடையின் பெயரை குறிப்பிட்டு 2000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளுமாறு போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை வேட்பாளர்கள் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில் கும்பகோணத்தில் உள்ள மளிகை கடை ஒன்றுக்கு ஏராளமானோர் வந்து டோக்கன் கொடுத்துள்ளனர். மேலும் அந்த மளிகை கடையில் 2000 ரூபாய்க்கு பொருட்களை இலவசமாக வாங்கி கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைக்கண்டு அதிர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஷேக் அகமது டோக்கனுக்கு மளிகை பொருட்கள் தருவதாக யாருக்கும் தான் டோக்கன் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து டோக்கனுடன் மக்கள் வந்ததையடுத்து வேட்பாளர் கொடுத்ததற்கும் தங்கள் மளிகை கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மளிகை கடைக்காரர் நோட்டீஸ் அடித்து ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை வேட்பாளர் ஏமாற்றிய சம்பவம் கும்பகோணம் முழுவதும் பேசு பொருளாக உள்ளது.







