தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரொனா பாதிப்பு..!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நான்காயிரத்தை நெருங்குகிறது. இன்று ஒரே நாளில் 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக கொரொனா பரவல் ஏற்படக்கூடிய முதல் ஐந்து மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் தேதியிலிருந்து மூவாயிரத்துக்கும் அதிகமானோருக்கு தினசரி தொற்று உறுதியாகி வருகிறது. கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இன்று நிலவரப்படி 4 ஆயிரத்தை நெருங்கி விட்டது.
27 ஆயிரத்து 743 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் இரட்டை இலக்கத்தில் வருகிறது.







