--- --:--:-- --

காலும் கையும் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு இருப்பது மனிதன் அல்ல கேக்..!

10

காலும் கையும் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு இருக்க சிரித்தபடி படுத்துக் கொண்டிருக்கும் மனிதன் ஒரு வெண்ணிலா கேக் என்பது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிறந்த நாள், கிறிஸ்துமஸ், திருமண நாள் கொண்டாட்டம், பார்ட்டி என அனைத்து சந்தோஷம் தருணங்களிலும் இடம்பெறுவது கேக்.

 

கேக் வெட்டி பார்ட்டி கொண்டாடும் கலாச்சாரம் வளர்ந்து வரும் இந்த தருணத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக விதவிதமான சுவைகளில் பல வடிவங்களில் அச்சு அசலாக தத்ரூபமாக கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

 

பிரிட்டனைச் சேர்ந்த கேக் தயாரிப்பாளரின் தயாரிப்புகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. கண்ணாடி டம்ளர், உருளைக்கிழங்கு, பழங்கள், காய்கறிகள், பீட்சா, அவகேடோ, மனிதனின் கை, சிக்கன், பர்கர், சாண்ட்விச் என பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் பார்ப்பதற்கு அதன் வடிவத்தையோ நிறத்தையோ பிரதிபலிப்பதாக உள்ளது.

 

இந்நிலையில் ஒரு மனிதன் பெட்டில் படுத்து இருப்பது போன்று பெட்டியுடன் வடிவமைத்த கேக் ஒன்று பார்வையாளர்களுக்கு அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon