ஊரடங்கை மீறியதாக கேபிள் டிவி பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு
கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கு இலிருந்து விலக்க கொடுக்கப்பட்ட போதிலும் ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்வதாக போலீசார் மீது கேபிள் டிவி கில்ட் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஊடகங்கள் வரிசையில் கேபிள்டிவி பணியாளர்களும் அத்தியாவசிய சேவைகளுக்குள் வருகின்றனர்.
இதனால் சேனல்கள் ஒளிபரப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கேபிள்டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேபிள் டிவி பணியாளர்கள் அடையாள அட்டையுடன் வெளியே சென்றாலும் போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி அபராதம் விதிப்பதாகவும், வழக்கு பதிவு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்தநிலையில் ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள கேபிள்டிவி பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது மற்றும் அபராதம் விதிப்பது சட்டவிரோதம் என்றும், இதை போலீசார் கவனத்தில் கொள்ளவேண்டும் என மதுரை கேபிள் கில்ட் தலைவர் பாண்டி தெரிவித்துள்ளார்.







