தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது..!
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்கு வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி விற்பனை செய்திருந்தது.
இது செபியின் விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்தநிலையில் முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 25 கோடி ரூபாயும், முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாயும் நவிமும்பை எஸ்சிஎஸ் நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாயும் மும்பையில் எசிஎஸ் நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






