--- --:--:-- --

3 சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் தற்கொலை..! மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை..!

11

திருச்சி அருகே மூன்று சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த அண்ணன் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனின் மரணத்தை தாங்காமல் தாயும் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

திருவாசி கிராமத்தை சேர்ந்த லீலாவதிக்கு இரண்டு மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஏற்கனவே இரண்டு மகள்கள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் மூன்றாவது மகளான மீனாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இதனால் மனமுடைந்த பால்ராஜ் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் மகனின் இழப்பை தாங்காமல் விரக்தியடைந்ததால் லீலாவும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

\

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon