--- --:--:-- --

செப்டம்பர் 30-ந் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து என அறிவிப்பு!!

11.1

கொரோனா காரணமாக அடுத்த மாதம் 30-ந் தேதி வரை நாடு முழுவதும் ரயில் சேவைகள் கிடையாது என ரயில்வே அறிவித்துள்ளது.

 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் வழக்கமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இடையில் புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க ஸ்ரா மிக் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அத்துடன் டெல்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

இந்நிலையில் வரும் செப்.30-ந் தேதி வரை ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பயணிகள் ரெயில், விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் சேவைகள் செப்.30 வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon