--- --:--:-- --

ஆழ் கடலில் திருமணம் செய்து கொண்டுள்ள மணமக்கள்..!

5

திருமணமே மறக்க முடியாத தருணமாக இருந்தாலும் அதை மேலும் மெருகூட்டும் விதமாக பேராஷூட் திருமணம், விமானத்தில் திருமணம், மலை உச்சியில் திருமணம், கப்பலில் திருமணம் என புதுப்புது ஸ்டைலில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது.

 

அந்த வரிசையில் தற்போது ஆழ்கடல் திருமணமும் இடம்பெற்றுள்ளது. திருவண்ணாமலையைச் சின்ன துறைக்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

 

பொழுதுபோக்கிற்காக ஆழ்கடல் நீச்சல் பயிற்சி எடுத்து வந்த சின்னதுரை தனது திருமணத்தை வழக்கமாக இல்லாமல் வித்தியாசமாக நடத்த நினைத்து கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை வீட்டில் கூரியுள்ளார்.

 

ஆழ்கடலில் திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் ஒப்புக் கொண்டதையடுத்து புதுச்சேரியை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அந்த மணமக்கள் திருமணத்திற்கு தயாராகும் விதமாக இருவரும் சில நாட்கள் நீச்சல் பயிற்சியும் எடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் இன்று காலை பாரம்பரிய உடைகள் அணிந்து படகில் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சென்னை நீலாங்கரையில் கடலுக்கு அடியில் திருமணம் நடைபெற்றது.

Leave a Reply

Right Menu Icon