--- --:--:-- --

சென்னை – சேலம் எட்டு வழி சாலை பணிகள் நடப்பு நிதி ஆண்டில் தொடங்கும்..!

6

சென்னை – சேலம் எட்டு வழி சாலை பணிகள் நடப்பு நிதி ஆண்டில் தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 270 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சேலம்- சென்னை எட்டு வழி சாலை கட்டுமான பணிகள் நடப்பு நிதியாண்டிலேயே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 278 கிலோமீட்டர் தொலைவில் ஆன பெங்களூரு – சென்னை அதிவிரைவு சாலை பணிகளும் நடப்பு நிதியாண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் டெல்லி – மும்பை அதிவிரைவு சாலையின் 260 கிலோ மீட்டர் தொலைவிலான எஞ்சிய பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் தொடங்கும் எனவும், கான்பூர்- லக்னோ விரைவுச்சாலை, ராய்ப்பூர்- விசாகப்பட்டினம் சாலை, அமிர்தசரஸ் ஜாம்நகர் சாலை மற்றும் டெல்லி கதிரா பணிகள் இந்த நிதியாண்டில் துவங்கும் எனவும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon