--- --:--:-- --

இந்திய அரசுக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ நன்றி தெரிவித்துள்ளார்..!

3

கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைப்பதற்காக சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் ஹனுமனின் படத்தை பதிவிட்டு இந்திய அரசுக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர் கொரொனாவை தடுப்பதற்கான தடுப்பூசிகளை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா மிகுந்த உதவி செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கிடையே இந்தியாவில் கொரொனா தடுப்பு மருந்துகள் மொரிஷியஸ், மியான்மார் மற்றும் மொரோக்கோ நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon