--- --:--:-- --

3,000 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை.. மண்டை ஓட்டையிலிருந்து துளை..!

9

மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித மூலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இஸ்ரேலில் பண்டைய நகரமான டெல் மெகிடோவில் வெண்கல காலத்தில் வாழ்ந்து இறந்த இரண்டு சகோதரர்களின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

 

அதில் ஒருவரது தலையில் மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை செய்ததற்கான தடயங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1.2 இன்ச் அளவில் துளை இருந்தது எனவும் அதில் நீக்கப்பட்டு எலும்பு துண்டு பின்னர் பொருத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

மூளை தொடர்பான அறுவை சிகிச்சைகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கின்றன என்பது வியப்பளிப்பதாக உள்ளது என கூறும் ஆராய்ச்சியாளர்கள் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு அவர்களுக்கு நோய் பாதிப்பு இருந்திருக்கலாம் எனவும் ஆய்வு தொடர்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Right Menu Icon