தகாத வார்த்தையால் திட்டியதால் தந்தையை கொன்ற மகன்..!
மதுவுக்கு அடிமையாகி தகாத வார்த்தைகளால் திட்டி வந்த தந்தையை சொந்த மகனே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் தேனி அருகே அரங்கேறியுள்ளது. ஆண்டிப்பட்டி தாலுகா பொம்மராஜபுரம் பகுதியில் சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் இளைய மகன் விக்ரமன் தனது அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளான். பொறுப்பற்ற முறையில் இருந்து வந்த இளங்கோவன் மது போதையில் விக்ரமனை தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளான்.
இதில் ஆத்திரமடைந்த விக்ரமன் தனது உறவினர்களான தமிழ்ச்செல்வம் உதவியுடன் தந்தைக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த விக்கிரமன் மற்றும் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





