கத்தியுடன் திரிந்து சிறுவர்கள்.. நள்ளிரவில் மிரட்டி பிச்சை எடுத்ததால் அதிர்ச்சி..!
மதுரை கோவில் அருகே அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்து வந்த மூன்று சிறார்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சாலையோர பைக்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்தபோதை கும்பல், அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளது இந்த கும்பல் அதே பகுதியில் மேலும் பலரை மிரட்டி பணம் பறித்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பலரும் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பொழுது தில்லைநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





