ரயில் தண்டவாளத்தில் உறங்கும் சிறுவர்கள்..!
நாமக்கலில் ரயில் தண்டவாளத்தில் சிறுவர்கள் அசால்ட்டாக படுத்து உறங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நாமக்கல் கரூர் செல்லும் ரயில் பாதை அமைந்துள்ளது. அருகில் உள்ள ஏரியில் தற்போது தண்ணீர் இல்லை.
இதனால் புள்ளிங்கோ கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிய பின்னர் சிறுவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உறங்குகின்றனர். ரயில் தண்டவாளத்தை தங்களின் டிரெஸ்ஸிங் ரூம் போல நினைத்துக் கொள்கின்றனர்.
பாடல்களை போட்டுக்கொண்டு உறங்குகின்றனர். பாலம் வழியாக செல்லும் உள்ளூர்வாசிகள் ரயில் வந்தால் இவர்களின் நிலைமை என்னவாகும் என்று எச்சரித்தாலும் கேட்பது இல்லை. இந்த வழித்தடத்தில் பலர் ரயிலில் அடிபட்டு இறந்து போகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






