--- --:--:-- --

காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை..!

5

ந்திராவில் காதலி தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட காதலன் இறப்பதற்கு முன்பாக வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன்.

 

இவர் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவருக்கு தேவையான பணம், நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்ததாக தெரிகிறது. சில நாட்களாக காதலி தன்னுடன் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது.

 

வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்வதாக காதலி கூறியதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பாகத் தன் காதலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட்டு வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon