--- --:--:-- --

போரிஸ் ஜான்சன் தமிழில் வணக்கம் கூறி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..!

3

ங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழில் வணக்கம் கூறி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

அதில் வணக்கம் பிரிட்டனிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்கள் இயற்கையின் அருட்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பொங்கல் கொண்டாடப்படுகிறது. கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பணி செய்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

 

ஏனென்றால் இந்த இக்கட்டான காலத்தில் கடின உழைப்பு ஒழுக்கம் போன்றவை பிரகாசமாக இருந்தது. முன் களப் பணிகளில் தமிழ் மருத்துவர்கள் துணிச்சலுடன் பணியாற்றினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon