--- --:--:-- --

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தம்மை சரியான விதத்தில் நடத்தவில்லை..!

12.1

கடைசி கால கிரிக்கெட் வாழ்க்கையின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தம்மை சரியான விதத்தில் நடத்தவில்லை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார் . 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை நாயகன் விருதையும் யுவராஜ் பெற்றுள்ளார்.

 

ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு தற்போது அளித்துள்ள பேட்டியில் ஹர்பஜன்சிங், சேவாக், ஜாகீர்கான் போன்றோரும் பிசிசிஐயால் மிகவும் மோசமாக நடத்தப் பட்டதாகவும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு பகுதியாகவே இது திகழ்வதாகவும் கூறியுள்ளார். கடந்த காலங்களிலும் இதே சம்பவத்தை கண்டு உள்ளதால் தான் ஆச்சர்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon