--- --:--:-- --

குவாரண்டைன் டேஸ்சில் டெரசில் மலர்ந்த காதல்!…பலூன் மூலம் காதலியை சந்தித்த காதலன்!

9.1

இனம், மொழி, மதம் என்ற எந்த வேறுபாடும் காதல் இடம் கொடுக்காது என்பதாலேயே காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லப்படுகிறது. காதலுக்கு கொரோனோவும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம். அமெரிக்காவில் கொரொனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய இந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரம், பிருக்ளீன் பகுதியில் வசித்து வந்த புகைப்பட கலைஞரான ஜெர்மி தனிமையில் இருந்த போதுதான் அந்த சுவாரசியமான யோசனை தோன்றியது.

 

கொரொனாவால் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடந்த ப்ரூக்ளின் வாசிகள் மொட்டை மாடியை அதிகம் உபயோகப்படுத்த தொடங்கி இருந்தனர். அவர்களை புகைப்படம் எடுத்து படமாக்கினால் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்று எண்ணி எண்ணி தன் கேமராவை சுழற்றி தொடங்கினார் . அப்போதுதான் அண்டை வீட்டு மாடியில் தன்னந்தனியாக ஒரு பெண் உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டார். கண்டதும் காதல் கொண்ட ஜெர்மி கையசைத்து ஒரு ஹாய் சொல்ல உடனடியாக அதற்கு பதில் கிடைத்தது.

 

உற்சாகத்தில் துள்ளி ஜெர்மி புறா விடுவது போல போன் மூலம் அந்தப் பெண்ணை தொடர்பு கொள்ள முடிவெடுத்தார். ட்ரோனில் தனது செல்போன் எண்ணை எழுதி அனுப்பினார். ட்ரோன் விடு தூது வெற்றி அடைந்த நிலையில் ஜெர்மியின் வாட்ஸ் அப்பிற்கு வந்தார் டோரி. இருவரும் அலைபேசியில் பேசியபடி இரண்டு நாட்களை நகர்த்தினார். தன் மனம் கவர்ந்த பெண்ணை டின்னருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார் .

 

ஜெர்மி கொரொனாவால் உலகமே உறைந்து கிடக்கும் சூழலில் எங்கே விருந்துக்கு போவது என்று யோசித்து ஜெர்மிக்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது. டோரியின் தோழி செல்போன் எண்ணை வாங்கிய ஜெர்மி தான் இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்புவதாகவும் அதற்காக சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அன்று தன்னை விதவிதமாக அலங்கரித்து கொண்ட ஜெர்மி உணவு வகைகளுடன் பால்கனியில் வந்து அமர்ந்தார்.

வழக்கம்போல டோரியை மொட்டைமாடிக்கு அழைக்க அங்கு வந்த டோரிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு டோரியின் தோழி விருந்தை தயாராக வைத்திருக்க காதலர்கள் இருவரும் வீடியோ காலில் அளவளாவி கொண்டு விருந்தை முடித்தனர். இப்படியே மேலும் இரு நாட்கள் கடந்த நிலையில் டோரியை நேரில் சந்தித்து ஆக வேண்டும் என்று முடிவெடுத்த ஜெர்மி ஒரு யோசனையை செயல்படுத்த தொடங்கினார்.

 

ஒரு பிரம்மாண்ட பலூனுக்குள் தான் நுழையும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொண்டு பாதுகாப்பாக டோரியை சந்திக்கப் புறப்பட்டார் ஜெர்மி . பலூன் வடிவத்தில் தன் வீட்டு வாசலில் நின்று வந்து காதலனை கண்டதும் விழுந்து விழுந்து சிரித்த டோரி உற்சாகமாக வலம் வந்தார்.

 

அப்போது அவர்களை கண்ட போலீஸ் நீங்கள் ஜெர்மி டோரி தானே என்று கேட்டு அவர்களின் காதலுக்கு வழி விட்டு நகர்ந்தனர்.இந்த காதல் தொடங்கிய நாள் முதல் ஜெர்மி சமூக வலைதள பதிவுகள் இருவரும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகி இருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon