--- --:--:-- --

போகலூர் ஒன்றிய ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

11

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபாலை சந்தித்து சில தினங்களுக்கு முன்னர் பா ஜ க ஒன்றிய கவுன்சிலர்கள் EMT கதிரவன்,சு.காளிதாஸ் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உருவப்படத்தை வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால் பிரதமரின் உருவப்படத்தை வைக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனையடுத்து இன்று போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபாலை கண்டித்து சத்திரக்குடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை அகற்றி தேச விரோத கும்பலுக்கு துணை போன போகலூர் ஒன்றிய ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் போகலூர் ஒன்றிய தலைவர், ஒன்றிய கவுன்சிலர் சு.காளிதாஸ் தலைமை வகித்தார். மேலும் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன்,போகலூர் ஒன்றிய கவுன்சிலர் EMT கதிரவன் முன்னிலை வகித்தனர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சு.நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் து.குப்புராமு, மாநில செயலாளர் கே.சண்முகராஜா, மாநில பட்டியல் இன மாநில தலைவர் பொன்.பாலகணபதி என ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon