--- --:--:-- --

பாஜக உத்தேசப்பட்டியலில் குஷ்பு, கவுதமி, அண்ணாமலை! கோவையில் வானதி!!

Kushpoo 01

அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான உத்தேசப் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, குஷ்பு, கவுதமி, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

 

சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ள சூழலில், வரும் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. எனவே, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

 

இந்த சூழலில், தமிழக பாஜக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

 

மயிலாப்பூர் – K.T.ராகவன், காரைக்குடி – H.ராஜா, சேப்பாக்கம் – நடிகை குஷ்பு, வேளச்சேரி – டால்பின் ஸ்ரீதர், காஞ்சிபுரம் – கேசவன், திருத்தணி – சக்கரவர்த்தி, பழனி – கார்வேந்தன், சிதம்பரம் – ஏழுமலை, கிணத்துக்கடவு – ஐ.பி.எஸ். அண்ணாமலை, கோவை தெற்கு – வானதி சீனிவாசன் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

 

பாஜக மாநிலத் தலைவர் முருகன், நாமக்கல் தொகுதியில் நிற்கிறார். ஆத்தூர் – வி.பி.துரைசாமியின் மகன் பிரேம், திருவாரூர் -கருப்பு முருகானந்தம், திருவண்ணாமலை – தணிகைவேல், வேலூர் – கார்த்தியாயினி, ஒசூர் – நரேந்திரன், தூத்துக்குடி – சிவ முருக ஆதித்தன், நெல்லை – நயினார் நாகேந்திரன், ராஜபாளையம் – நடிகை கவுதமி, துறைமுகம் – வினோஜ் பி.செல்வம் ஆகியோர் போட்டியிடலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அறுபடை வீடுகளான பழனி, திருத்தணி ஆகிய தொகுதிகள், பாஜகவினர் பெயர் இடம் பெற்றுள்ளது. இது உத்தேசப்பட்டியல் என்பதால், தொகுதிகளோ அல்லது வேட்பாளர்களின் விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

Leave a Reply

Right Menu Icon