--- --:--:-- --

பிறந்த நாள் பார்ட்டி அளித்த நகை வியாபாரி கொரொனாவால் பலி..! கலந்து கொண்ட 100 பேர் தவிப்பு..!

Nurse wearing respirator mask holding a positive blood test result for the new rapidly spreading Coronavirus, originating in Wuhan, China

Nurse wearing respirator mask holding a positive blood test result for the new rapidly spreading Coronavirus, originating in Wuhan, China

ஹைதராபாத்தில் முன்னணி நகை வியாபாரி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து இறப்பதற்கு ஒரு நாள் முன்பு அவர் அளித்த பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் பீதியில் உறைந்து இருக்கின்றனர்.

 

நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட மற்றொரு முன்னணி நகைக் கடை உரிமையாளர் ஒருவரும் வைரஸ் தொற்றால் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. பார்ட்டி அளித்த நகை வியாபாரியின் இறப்பு செய்தியை கேட்ட பின்னர் அதில் பங்கேற்ற அனைவரும் பீதியடைந்து கொரோனா சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

 

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 850 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon