இந்தியாவிற்குள் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்..!
ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பூஞ்ச் மாவட்டம் பாலகோட் பகுதியில் சிறிய ரக குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். ராக்சிக்கிரி மற்றும் பக்சார் பகுதிகளில் நடந்த மோதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தனர்.







