பிஹார் தேர்தல்: 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், 1.20 லட்சம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 7.23. கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல்மயமாக்கம் பணிகள் நிறைவுபெற்றதாகவும் கூறியுள்ளது.





