--- --:--:-- --

தண்டவாளத்தில் ஓட்டும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சைக்கிள்..!

3

தண்டவாளத்தில் ஓட்ட கூடிய வகையில் சைக்கிள் ஒன்றினை ரயில்வே அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

 

தண்டவாளத்தில் பழுது ஏற்பட்ட பகுதி ரயில் நிலையத்திலிருந்து தொலைவில் இருந்தாலும் அந்த இடத்துக்கு டிராக்மேன் எனப்படும் பராமரிப்பாளர்கள் நடந்து சென்றுதான் பழுதை நீக்க முடியும்.

 

இந்த நிலையில் பழுது ஏற்பட்டு இருக்கும் பகுதிக்கு விரைந்து செல்லும் விதமாக தண்டவாளத்தில் ஓட்டக்கூடிய சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரி ஒருவர் தயாரித்திருக்கும் இந்த சைக்கிளில் தண்டவாளத்தில் செல்பவதற்கு ஏற்ப நாம் வழக்கமாக பயன்படுத்தக்கூடிய சைக்கிளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon