விவசாயிகளுக்கு உடனுக்குடன் வங்கி அதிகாரிகள் கடன் வழங்க வேண்டும்!
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் விவசாயிகள், சிறு, குறு, தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர் தமிழக அரசுக்கு வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினார்.
தமிழகத்தில் 5 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு கூடுதலாக கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுய உதவி குழுக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டுமென்றும் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.







