பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை..!
நாட்டிலேயே பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் கேன்களுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் ஆளுநருடன் இணைந்து கழிவுகளை சுத்தப்படுத்தும் முயற்சியில் நேற்று முன்தினம் கலந்துகொண்டபோது செய்தியாளரிடம் பேசிய அவர் சிக்கிம் மாநிலம் பிளாஸ்டிக்கிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும் என்றும் இந்த தடை 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து சிக்கிம் வரக்கூடிய பிளாஸ்டிக்குடிநீர் பாட்டில்களின் சப்ளையை தடுத்து நிறுத்த சிக்கிம் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது நிலத்தடி நீர் கிடைக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூட பிளாஸ்டிக் குடிநீரை வாங்கி பயன்படுத்தவில்லை எனில் நாட்டிலேயே முதன் முறையாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை வைத்து இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.






