--- --:--:-- --

மனைவியின் கள்ளக்காதல்..வாயில் துணியை கட்டி கணவன் செய்த கொடூர செயல்..!

4

சென்னை அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்த மனைவியை நண்பர்களுடன் சென்று காரில் கடத்தி கணவர் சித்திரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சல்மா அக்பர் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் வசித்து வருகிறார்.

 

திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் முதல் கணவருடன் அவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே அழகு நிலையத்தில் வேலை பார்த்த பொழுது பழக்கம் ஏற்பட்டு வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரை சல்மா திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இந்த இருவரும் பிரிந்த நிலையில் சல்மாவுடன் தனிமையில் இருந்த பொழுது நடந்த வீடியோவை காட்டி பர்வேஸ் மிரட்ட தொடங்கியுள்ளார்.

 

வீடியோவை டெலிட் செய்வதாக கூறி சல்மாவை வரவழைத்தவர் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து காரில் கடத்தியுள்ளார். சல்மாவின் வாயில் துணியை வைத்து கட்டி தனியறைக்கு கொண்டு சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு சென்ற சல்மா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Right Menu Icon