--- --:--:-- --

சென்னை ஏர்போட்டில் கேட்பாரற்றுக் கிடந்த பை..!

9

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் டிராலி வண்டியில் கேட்பாரற்று பை கிடந்தது. இதனை கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பை குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

 

சந்தேகம் அடைந்த போலீசார் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவியை வைத்து சோதனை செய்தனர். அப்பொழுது விரைந்து வந்த பயணி ஒருவர் அங்கு போய் தன்னுடையது எனக் கூறினார். சம்பந்தப்பட்ட நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

 

பையில் மர்ம பொருட்கள் இல்லாததால் அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon