--- --:--:-- --

மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தை..! மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்.!

7

யிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகை இட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி கருவுற்ற நாளிலிருந்து பிரபல தனியார் மருத்துவமனையில் காண்பித்த வந்துள்ளார்.

 

இதனிடையே அடுத்த மாதம் 19 ஆம் நாள் பிரசவத்திற்கு நான் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூங்குழலி வழக்கம்போல் மருத்துவமனைக்கு சென்றபோது அவரை பரிசோதித்த பெண் மருத்துவர் உடனடியாக அறுவை மருத்துவம் செய்ய வேண்டும் எனவும் இல்லை என்றால் குழந்தைக்கு ஆபத்து எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதை தொடர்ந்து அறுவை மருத்துவம் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து குழந்தை இங்குபேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திடீரென்று குழந்தை உயிரிழந்ததாக செவிலியர் கூறவே பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இந்த நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்து முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon