லெபனானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின்போது பிறந்த குழந்தை..!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டு வெடிப்பின்போது பிறந்த ஆண்குழந்தை அதிசய குழந்தையாக கருதப்படுகிறது. துறைமுகப் பகுதியில் ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,250 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடி மருந்து வெடித்ததில் 170 பேர் பலியாகினர்.
6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் உருக்குலைந்து போயின. குண்டு வெடிப்பதற்கு சில வினாடிகள் முன்பு தான் எட்வர்ட்டின் மனைவி இமானுவேல் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குழந்தை பிறந்ததும் வீடியோ எடுக்கத் தயாராக இருந்தவர் குண்டுவெடிப்பால் அந்த அறையின் சில பகுதிகள் இடிந்து சிதறியதை தான் பதிவு செய்தார். குண்டுவெடிப்பால் கட்டிட சுவர் இடிந்ததில் செவிலியர் பலியானார்.
தலைவி மருத்துவரின் உதவியுடன் நடந்த பிரசவத்தில் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜார்ஜ் என்ற பெயர் சூட்டப்பட்ட தம்பதியின் மகனை அனைவரும் அதிசய குழந்தை என்றே அழைக்கின்றனர்.







