பப்ஜி மதனின் 2 யூடியூப் சேனல்கள் முடக்கம்..!
ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டு ஒளிபரப்பி வந்த மகனின் இரண்டு யூடியூப் சேனல்களை சைபர் கிரைம் காவல்துறையினர் முடக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதன் 2 யூடியூப் சேனல் களை நடத்தி வந்தது தெரியவந்தது.
அவற்றை முடக்கும்படி வந்த பரிந்துரையை அடுத்து டாக்சிக்18 பிளஸ் யூடியூப் ஆகிய இரண்டு யூடியூப் சேனல்களை சைபர் கிரைம் காவல்துறையினர் முடக்கியுள்ளனர். மீதமுள்ள இரண்டு சேனல்களையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
முடக்கப்பட்ட இரண்டு சேனல்களின் முகப்பு பக்கத்தில் பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை கூறும் வாசகங்களைக் சைபர் கிரைம் காவல்துறையினர் இடம்பெறச் செய்துள்ளனர்.






