--- --:--:-- --

16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது..!

6

மிழ்நாட்டில் 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஆளுநர் உரையில் இடம்பெறும் அறிவிப்புகள் என்ன என்று எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி உள்ளனர்.

 

நடந்து முடிந்த தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையோடு வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்து உள்ள சூழலில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்க உள்ளது.

 

பொதுவாக ஆண்டுதோறும் புதிய அரசு பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் கூட்டத் தொடரிலும் ஆளுநர் உரை இடம்பெறும். அந்த வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எடுத்துரைக்கும் வகையில் ஆளுநர் உரை இருக்கும்.

 

குறிப்பாக கொரொனா இரண்டாவது கொரொனா அலையை கட்டுப்படுத்துவது அரசின் சாதனையாக ஆளுநர் உரையில் இடம்பெறும் என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon