--- --:--:-- --

குற்றால வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்கள்..!

8

தென்காசி குற்றால அருவியில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனங்கள் தொலைவில் நிறுத்தச் சென்று சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனால் முதியவர்கள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Right Menu Icon