வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆஸ்திரேலிய மக்கள்..!
காட்டுத்தீ சூறாவளியை தொடர்ந்து தற்பொழுது பெருவெள்ளம் ஆஸ்திரேலியாவை நிலைகுலைய செய்துள்ளது. இந்த பெருவெள்ளம் காலநிலை மாற்றத்தை உணர வேண்டியதன் அறிகுறி என்கின்றனர் ஆய்வாளர்கள்.
குடியிருப்புகளை மூழ்கடிக்கும் வெள்ளம் உயரமான இடங்களை தேடிச்செல்லும் மக்கள் என கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறிப்பாக குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானம் மூலம் அந்நாட்டு அரசு வருகிறது.





