அல்பா ஆலை மீது தாக்குதல் : 2 ஊழியர்கள் காயம்
பஹ்ரைன் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ‘அலுமினியம் பஹ்ரைன்’ (Alba) ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர். ஈரானின் இரண்டு எஃகு ஆலைகள் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
காயமடைந்த ஊழியர்கள் நலமுடன் இருப்பதாகவும், ஆலைக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பஹ்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





