துப்புரவு பணியாளர் அட்டூழியம்.. பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்..!
சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தனது கணவரையும் மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து வந்த வீராணத்தை சேர்ந்த பெண் ஒருவர் குளியலறையில் குளித்த பொழுது வீடியோ எடுத்த துப்புரவு பணியாளர் விவேகானந்தர் அதனை அந்த பெண்ணுக்கு அனுப்பி மிரட்டியதாக தெரிகிறது.
போலீசார் தன்னை தேடுபவரை அறிந்த விவேகானந்தன் சிம் கார்டை உடைத்துவிட்டு தலைமறைவான நிலையில் செல்போனின் நம்பரை ட்ராக் செய்து பிடித்தனர்.






