--- --:--:-- --

மாணவிக்கும் தனக்கும் திருமணம் ஆனது போல் போலியான சான்றிதழ் தயாரித்த உதவி பேராசிரியர்..!

13

சென்னையில் கல்லூரி மாணவிக்கும் தனக்கும் திருமணம் ஆனது போல் போலியான சான்றிதழ் தயாரித்த மிரட்டி வந்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவன் சதீஷ்குமார்.

 

ஏற்கனவே திருமணமான சதீஷ்குமார் தன்னிடம் பயிலும் மாணவிக்கும், அவளுக்கும் திருமணம் ஆனது போன்ற போலியான சான்றிதழ் தயாரித்து அதோடு தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் இந்த சான்றிதழை சமூகவலைதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

 

இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் உதவிப்பேராசிரியர் சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon