போதைக்காக 5 ரூபாய் மாத்திரையை 70 ரூபாய்க்கு விற்பனை செய்த மருந்துக்கடை..!
சென்னையில் போதைக்காக வலி நிவாரண மாத்திரையை சிறுவர்களுக்கு விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூரில் கஞ்சா விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து சிறுவன் ஒருவனை பிடித்த காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்போது சிறுவன் பயன்படுத்தியது வலி நிவாரண மாத்திரைகள் என தெரியவந்தது. பின்னர் அந்த சிறுவன் காவல்துறையின் ஆலோசனைப்படி கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள மருந்து கடையில் 5 ரூபாய் மாத்திரையை 700 ரூபாய் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.
அதனை மறைந்திருந்து நோட்டமிட்ட காவல்துறையினர் அந்த கடைக்குள் புகுந்து சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த 170 வலி நிவாரண மாத்திரைகள், 25 வலி நிவாரண மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மருந்து கடை உரிமையாளர் மோகன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







