--- --:--:-- --

மயானத்திற்கு பாதை இல்லாததால் ஆற்றில் இறங்கி எடுத்து சென்ற அவலம்..!

7

ரியலூரில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் அம்மாக்குளம் கிராமத்தில் தற்பொழுது பெய்த மழையால் மருதையாற்றில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் செல்கிறது.

 

இந்நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டி ஒருவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல வழி இல்லாமல் உறவினர்கள் அவதியடைந்தனர்.

 

குறிப்பாக மூதாட்டியின் உடலை ஏந்தியவாறு உடலை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கிராம மக்கள் அவதி அடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Right Menu Icon