போதை சாக்லேட் கடத்தியவர்கள் கைது!
வெளிமாநிலத்தில் இருந்து ரயில் வழியாக சென்னைக்கு போதை சாக்லெட்டை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்ததை கண்ட சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர்களின் உடைமைகளைப் போலீசார் சோதனையிட்டனர். அப்போது பாக்கெட் பாக்கெட்டாக போதை சாக்லேட் வைத்து இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
பீகாரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் போதை சாக்லேட் கடத்தியவர்கள் கைது
இதையடுத்து போதை சாக்லெட்டை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் சாக்லெட்டை கடத்திய பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து சென்னை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பூக்கடை போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





