--- --:--:-- --

கோவை மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முககவசம் மற்றும் ஆர்சனிக் ஆல்பமின் ஓமியோபதி மாத்திரை..!

7.1

கோவை மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கென தேன் கூடு தொண்டு நிறுவனம் சார்பாக ஆயிரம் என் 95 முக க்கவசங்கள் மற்றும் ஆர்சனிக் ஆல்பமின் ஓமியோபதி மாத்திரைகளை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத்திடம் வழங்கப்பட்டது.

 

கோவை மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு கருதி தேன்கூடு தொண்டு நிறுவனத்தின் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கென ஓமியோபதி நோய் தடுப்பு மருந்தான ஆர்சனிக் ஆல்பமின் மாத்திரைகள் மற்றும் ஆயிரம் என் 95 வகை முக கவசங்களை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத்திடம் வழங்கப்பட்டது.

 

இவற்றை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிவண்ணபிரபு மற்றும் இயக்குனர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு ஆகியோர் வழங்கினர்.இதில் தேன்கூட்டின் தலைவர் நீதிபதி பாலசந்தர்,டாக்டர் பிரசாந்த் ,முன்னால் மேயர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கோவை மாநகராட்சி பகுதிகளில் கடந்த மாதம் மட்டும் சுமார் 3600 மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும்,இவற்றில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

 

பெரும்பாலான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு,பொதுமக்கள் காய்ச்சல்,மற்றும் சளி உள்ளதா என பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும்,அவ்வாறு இருப்பின் அவர்களின் இருப்பிடத்திற்கே தகுந்த பாதுகாப்புடன் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

 

மேலும்,இது போன்று முகாம்கள் கொரோனா தொற்று நோயாளிகளை கண்டறிய பயனுள்ளதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon