--- --:--:-- --

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை காவலர் !!!

1

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இன்றைய நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 13,387 ஆகவும்,உயிரிழப்பும் ஒரே நாளில் 23 அதிகரித்து 437 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோவையில் இது வரை 127 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் , நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உணவின்றி தவித்து வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதியினை வழங்க வேண்டுகோள் விடப்பட்டது.

 

தொழிலதிபர்களும்,பொதுமக்களும்,தன்னார்வலர்களும் தாமாக முன் வந்து தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியினை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக அரசுக்கு இதுவரை 134 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வந்துள்ளது.

தொழிலதிபர்களும்,பொதுமக்களும்,தன்னார்வலர்களும் தாமாக முன் வந்து சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர்,வெளிமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறார்.

 

கோவை மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் பாபு.இவர் கொரோனோ வைரஸ் தாக்குதலினால் சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர்,வெளிமாநில தொழிலாளர்கள் உண்ண உணவின்றி தவிப்பதை குறித்து மன வேதனை அடைந்தார்.

 

இவர்களின் நிலையை அறிந்த பாபு தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத சம்பளம் ரூ.25,788 /- யை வரைவோலையாக கோவை மாவட்ட எஸ்.பி.சுஜித் குமார் அவர்களிடம் இன்று வழங்கினார்.

 

விதிமீறலை கண்டால் லத்தியை சுழற்றும் காவலர்கள்,அறிவுரை கூறும் காவலர்கள் என்பதை பார்த்திருப்போம். ஆதரவற்றோர்,சாலையோரம் வசிப்போர்,வெளிமாநில மக்களின் நிலையை கருத்தில் கொண்டு காவலர் ஒருவர் முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சம்பவம் பொது மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Leave a Reply

Right Menu Icon