--- --:--:-- --

அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு மாத கால அவகாசம்..!

8

டிப்ளமோ அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

டிப்ளமோ மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் தான் மறுமதிப்பீட்டு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த கால அவகாசம் முடிந்து விட்டதாகவும் மறுமதிப்பீட்டில் தோல்வியடைந்ததால் மீண்டும் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த சென்ற போது கால அவகாசம் முடிந்து விட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அனைத்து டிப்ளோமா மாணவர்களின் நிலை கருதி அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி வாய்ப்பாக மேலும் ஒரு மாத காலம் அவகாசம் அளிக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon