திருவாடானை அருகே ஆலம்பாடி காளிகோவில் இரு கோஷ்டிகளிடையே பிரச்சனை பேச்சுவார்த்தை தோல்வி..!
திருவாடானை அருகே ஆலம்பாடி காளிகோவில் இரு கோஷ்டிகளிடையே பிரச்சனை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனால் கிராம மக்களில் ஒரு கோஷ்டியினர் தாசில்தாரிடம் ஆதார் ரேசன் கார்டுகளை ஒப்படைக்க சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே . ஆலம்பாடி கிராமத்தில் அருள்மிகு ஒட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழாவில் சாமி கும்பிடுவது சம்பந்தமாக இரு தரப்பினர்கள் உள்ளனர். இது சம்பந்தமாக இன்று தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வியடைந்தது.
இதனால் ஒரு தரப்பினர் வெளிநடப்பு செய்ததோடு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க சென்றனர் அதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து கூறுகையில் ஏற்கனவே கும்பாபிஷேகம் நடத்தியதில் ஒரு தரப்பினர் கணக்கு காட்டவில்லை என்றும் அதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து அந்த மனுவில் நான்கு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவாகியுள்ளது.
இந்நிலையில் இதே தரப்பினரால் தற்போது திருவிழா கொண்டாடப்பட இருப்பதாகவும் அதில் தங்கள் தரப்பை சேர்ந்த 30 குடும்பங்களை ஒதுக்கிவிட்டு திருவிழா கொண்டாட இருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து அதன்படி திருவாடணையில்தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி அதில் தோல்வி ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக தெரிவித்தனர்.

இது குறித்து அலுவலர்களிடம் விசாரித்த போது இரு தரப்பினரும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் நடந்து கொள்ளுங்கள் என்றும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.





