டிக் டாக் செயலியை வாங்க ஆப்பிள் நிறுவனம் விருப்பம் தெரிவிக்கவில்லை..!
டிக் டாக் செயலியை வாங்குவதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல அமெரிக்கர்களின் தனிநபர் தரவுகளை டிக் டாக் கையாளுவதால் சீன நிறுவனமான டிக் டாக் மூலம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என கடந்த வாரம் கூறிய அதிபர் டிரம்ப் 45 நாட்களுக்குள் அது சீனா அல்லாத வேறு நிர்வாகத்திற்கு மாறவில்லை என்றால் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் ஆலோசித்து வருகிறது என்ற செய்தி தகவல் வெளியானது. ஆனால் அதை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது.







