உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் !!!
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,46 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூலம் சமூக பரவலை தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நாளான இன்றும் பொதுமக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.முக்கியமாக கிராமம்,நகர மற்றும் மாநகர பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவராயபுரம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட தேவராய புரம்,நல்லிக்கவுண்டன் புதூர்,வேலாயுதம் பாளையம்,சென்றாம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரிதங்கவேல் தலைமையில் தெருக்கள்,கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும்,கை கழுவுவதன் அவசியம் குறித்தும் பொது மக்களிடையே விளக்கமளிக்கப்பட்டது.கைகளை எவ்வாறு சுத்தப்படுத்துவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் கிருஷ்ணன்,அதிமுக ஊராட்சி கிளை செயலாளர் தங்கவேல்,ஊராட்சி செயலர் செல்வக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலேறி பாளையம் ஊராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் ஊராட்சி மன்ற தலைவர் கோமதிமூர்த்தி தலைமையில் தெருக்கள்,கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மேலும்,கை கழுவுவதன் அவசியம் குறித்தும் பொது மக்களிடையே விளக்கமளிக்கப்பட்டது.கைகளை எவ்வாறு சுத்தப்படுத்துவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்ரமணி , ஊராட்சி செயலர் கார்த்திக்கேயன் , வார்டு உறுப்பினர்கள் செந்தில் குமார்,பவித்ரா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.







